மின்மானி வாசிப்பாளர் மீது தாக்குதல்

தமது வீட்டிற்கான இந்த மாத மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளதாகக் கூறி, மின்மானி வாசிப்பாளர் ஒருவரை கட்டையால் தாக்கிய சம்பவம் ஒன்று புத்தளம் – மஹகும்புக்கடவல பகுதியில் பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான மின்மானி வாசிப்பாளர் கடும் காயத்திற்குள்ளான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிலாபம் மின் பொறியியலாளர் அலுவலகத்தின் கீழ் சேவையாற்றும் மின்மானி வாசிப்பாளர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மின்கட்டணம் அதிகரித்துள்ளதாக கூறி தாக்குதல் நடத்திய சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Related Post

அத்தை வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி
பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக [...]

எரிபொருள் நெருக்கடி – புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்
எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. [...]

கூகுள் நிறுவனத்துக்கு 1,910 கோடி ரூபாய் அபராதம்
அவதூறான வலைதள பதிவுக்காக கூகுள் நிறுவனத்துக்கு ஆயிரத்து 910 கோடி ரூபாய் அபராதம் [...]