ஏ9 வீதியில் விபத்து -13 வயது சிறுமி மரணம், இருவர் படுகாயம்

ஏ9 வீதி பூனாவ பகுதியில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏ9 வீதி பூனாவ பகுதியில் பயணித்த கார் ஒன்று வீதியின் குறுக்காக சென்ற நாய் ஒன்றுடன் விபத்துக்குள்ளாக முற்பட்ட நிலையில், சாரதி விபத்தை கட்டுப்படுத்தும் விதமாக வாகனத்தை செலுத்திய போது வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது கட்டுப்பாட்டையிழந்து மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் அப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவரது தாயார் மற்றும் கார் சாரதி ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
மரணமடைந்த சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து குறித்து பூனாவ பொலிசார் விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.
Related Post

121 வயது வரை வாழ்ந்த மூதாட்டி மரணம்
நாகலாந்தில் வயோதிப பெண்ணொருவர் 121 வயது வரை வாழ்ந்து காலமாகியுள்ளார். புபிரே புகா [...]

யாழில் டெங்கு காய்ச்சலினால் 5 வயது சிறுமி உயிரிழப்பு
டெங்கு காய்ச்சல் காரணமாக 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடுவிலைச் சேர்ந்த [...]

தடை செய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டு தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்
தடை செய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பலஸ்தீனியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இஸ்ரேலுக்குள் [...]