முட்டைக்கான வரியில் திருத்தம்
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி முட்டை எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனம் இந்த முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதன்முறையாக இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 02 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் மீது நிதி அமைச்சினால் விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட சரக்கு வரி பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த வரித் திருத்தம் மூன்று மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.