வவுனியாவில் விபத்து – ஒருவர் மரணம்

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இன்று (13) காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகர் பகுதியிலிருந்து யாழ் நோக்கி புளியங்குளம் பாடசாலைக்கு முன்பாக சென்று கொண்டிருந்த கயஸ் ரக வாகனம் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பஞ்சநாதன் குகேந்திரன் (வயது-49) என்ற நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்
சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Post

வைத்தியசாலையில் 24 வயது இளைஞன் குத்தி கொலை
அனுராபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், கூரிய ஆயுதத்தினால் குத்தி [...]

யாழ்.மாநகரசபை புதிய முதல்வர் தெரிவு ஒத்திவைப்பு – ஒளிந்துகொண்ட உறுப்பினர்கள்
யாழ்.மாநகரசபை புதிய முதல்வர் தெரிவு சபையில் கோரம் போதாமையினால் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இன்று காலை [...]

யாழில் பட்டதாரி மாணவி தற்கொலை – வெளியான காரணம்
யாழ்ப்பாணத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து [...]