கிளி. அறிவியல் நகரில் பேருந்து, கப் ரக வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்து

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரதம் , இ.போ.ச பேருந்து மற்றும் கப் ரக வாகனம் என்பன விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
தெய்வாதீனமாக குறித்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணித்த சிலர் காயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் , யாழில் இருந்து சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் ,யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதியின் கப் ரக வாகனமும் புகையிரதத்துடன் விபத்துக்கு உள்ளாகியுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Related Post

காணி தகராறு – தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன்
நில தகராறு காரணமாக அண்ணன் – தம்பி இடையில் மதுபோதையில் உருவான வாய்த்தர்க்கம் [...]

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சி
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். [...]

இரு பேருந்துக்கள் மோதி விபத்து – 7 மாணவர்கள் காயம்
ஹொரணையிலிருந்து மஹரகம நோக்கி செல்லும் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (3) காலை [...]