இலங்கையில் 7 நாட்களில் 3 சிறுவர்கள், 8 பெண்கள் உட்பட 51 பேர் படுகொலை
இலங்கையில் கடந்த 7 நாட்களில் (12 – 18) மாத்திரம் 51 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மாகாணப் பொலிஸாரின் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 7 நாட்களில் 3 சிறுவர்கள், 8 பெண்கள் உள்ளிட்ட 51 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குடும்பத் தகராறு, தனிப்பட்ட தகராறு, காதல் விவகாரம், போதைப்பொருள் விற்பனைப் போட்டி மற்றும் கோஷ்டி மோதல்களால் மேற்படி படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதற்கமைய வடமேல் மாகாணத்தில் 7 நாட்களில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 9 பேரும், தென் மாகாணத்தில் 7 பேரும், மத்திய மாகாணத்தில் 3 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 2 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, வட மத்திய மாகாணத்தில் 6 பேரும், ஊவா மாகாணத்தில் 5 பேரும், கிழக்கு மாகாணத்தில் 4 பேரும், வடக்கு மாகாணத்தில் 3 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.