நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை விதித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்காக அதிகாரிகளுக்கு விசாரணையின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது திஸ்ஸமஹாராம பொலிஸில் கடமையாற்றிய குற்றப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிமன்றம் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது.
Related Post

வவுனியாவில் கிணற்றிலிருந்து 26 வயது இளைஞரின் சடலம் மீட்பு
வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் நேற்றையதினம் (24) கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக [...]
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் பிரான்ஸில் முக்கிய பதவியில்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் பிரான்ஸ் பொலிஸ் பிரிவில் முக்கிய பதவியில் இணைந்துள்ளார் [...]

யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு
யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்து தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களிடம் அரச மருத்துவ அதிகாரிகள் [...]