Day: February 15, 2023

ஓடும் பேருந்தில் தூங்கிய சாரதி – பாடசாலை மாணவன் பலிஓடும் பேருந்தில் தூங்கிய சாரதி – பாடசாலை மாணவன் பலி

பல்லேபெத்த பிரதேசத்தில் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊருபொக்க பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று (15) அதிகாலை பல்லேபெத்த களுவரகஹா வளைவுக்கு அருகில் யாத்ரீகர்கள் சிலரை ஏற்றிச் [...]

நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனைநபர் ஒருவரை சுட்டுக் கொன்ற 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை விதித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்காக அதிகாரிகளுக்கு [...]

கொழும்பில் உள்ள இந்திய விசா மையத்திற்கு பூட்டுகொழும்பில் உள்ள இந்திய விசா மையத்திற்கு பூட்டு

பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, விசா நியமனங்களுக்கு வழங்கப்படும் நேரங்கள் மாற்றப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர [...]

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நியூசிலாந்தின் வெலிங்டன் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இரவு 7.38 மணியளவில் ரிக்டர் அளவில் 6.1ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், [...]

இன்று முதல் 66% மின் கட்டணம் அதிகரிப்புஇன்று முதல் 66% மின் கட்டணம் அதிகரிப்பு

இன்று (15) முதல் 66% மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது. [...]

துருக்கி நிலநடுக்கத்தில் இதுவரை 41,000 பேர் உயிரிழப்புதுருக்கி நிலநடுக்கத்தில் இதுவரை 41,000 பேர் உயிரிழப்பு

துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41,000 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கிய ஒன்பது பேர் ஒரு வாரத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. [...]

மீண்டும் ஆரம்பம் ஆகும் கடவுச்சீட்டு வழங்கும் பணிமீண்டும் ஆரம்பம் ஆகும் கடவுச்சீட்டு வழங்கும் பணி

பத்தரமுல்ல குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கும் பணி இன்று (14) காலை 08.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடவுச்சீட்டு வழங்குவதை [...]

இன்று இறுதி தீர்மானதிக்கு வரும் மின்கட்டண தீர்வுஇன்று இறுதி தீர்மானதிக்கு வரும் மின்கட்டண தீர்வு

மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை இணைந்து நேற்று (13) நடத்திய கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்ததாக இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் இன்று (14) பாராளுமன்றத்தில் தேசிய பேரவைக்கு அறிவித்தனர். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் [...]

8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட யாழ் மாநகரசபை வரவு செலவுத் திட்டம்8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட யாழ் மாநகரசபை வரவு செலவுத் திட்டம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ.ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற [...]

மதுபோதையில் மோதல் – நால்வர் வெட்டி கொலை, மூவர் படுகாயம்மதுபோதையில் மோதல் – நால்வர் வெட்டி கொலை, மூவர் படுகாயம்

மதுபோதையில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் குருநாகலில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 22, 25, 35, 41 வயதுடைய நபர்களே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். கொலை [...]

பிற்போடப்படும் நிலையில் உள்ளூராட்சி தேர்தல்பிற்போடப்படும் நிலையில் உள்ளூராட்சி தேர்தல்

உள்ளூராட்சி தேர்தலுக்கான பணிகளை உரிய காலத்திற்குள் நிறைவு செய்யாவிட்டால் தேர்தலை பிற்போடும் நிலையே உருவாகும். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விவகாரத்தில் சட்டமாதிபரின் ஒத்துழைப்பு போதுமானதாக அமையவில்லை, ஆகவே தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை மீண்டும் நாட அவதானம் செலுத்தியுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் [...]

பிரதானமாக சீரான வானிலை நிலவும்பிரதானமாக சீரான வானிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் [...]