மதுபோதையில் வீட்டுக்கு சென்ற 14 வயது சிறுவன்
மதுபோதையில் வீட்டுக்கு சென்ற 14 வயது சிறுவனை தாய் கண்டித்ததால் சிறுவன் உயிரை மாய்த்த சம்பவம் தென்மராட்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் ஒருவர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 12) மாலை மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவர் மது போதையில் சென்றதை அவரின் தாயார் கண்டித்துள்ளார்.அதனால் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில்
நேற்றிரவு பத்து மணியளவில் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக
யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை (பெப்ரவரி 13) காலை உயிரிழந்துள்ளார்.
இறப்பு தொடர்பில் யாழ்.போதன மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.