யாழில் மனைவி சட்டத்தரணியுடன் தொடர்பு – கணவனான வைத்தியருக்கு கொலை மிரட்டல்
யாழில் இளம் சட்டத்தரணியுடன் தனது மனைவி தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த வைத்தியர், மனைவியின் தாயாரை கடுமையாகத் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
வைத்தியரின் காணி பிணக்கு ஒன்றை தீர்க்க சட்டத்தரணி உதவியதை அடுத்து அவர் வைத்தியருக்கு நெருங்கிய நண்பரானதாகவும் கூறப்படுகின்றது.
அந்த நட்பின் பலனாக அவர்களின் வீட்டுக்கு சென்று வந்த போதே மனைவியுடன் நட்பு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. இந்நிலையில் வைத்தியர் வெளிமாவட்ட வைத்தியசாலை ஒன்றிலேயே கடமையாற்றி வரும் நிலையில் நண்பரான சட்டத்தரணி, வைத்தியரின் மனைவியுடன் நெருங்கி பழகியதாக கூறப்படுகின்றது.
இதனை அறிந்த மருத்துவர் அது தொடர்பாக மனைவியை எச்சரித்ததுடன் சட்டத்தரணியையும் எச்சரித்ததாகத் தெரியவருகின்றது. அத்துடன் தனது வீட்டுக்கு சிசிரீவி கமராக்கள் பூட்டி தனது தொலைபேசியில் இருந்து மருத்துவர் கண்காணித்து வந்துள்ளார்.
மனைவியின் இரு சகோதரர்கள் வெளிநாட்டில் வாழ்வதாகவும் வைத்தியருக்கு சீதனமாகக் கொடுத்த வீட்டில் தந்தை மரணித்த நிலையில் தாயாரும் மனைவியுமே தனித்து வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் வெளிமாவட்டத்தில் கடமையாற்றிய வைத்தியர் அண்மையில் திடீரென லீவு போட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு மனைவியைக் காணாததால் மனைவியின் தாயாரிடம் மனைவி தொடர்பில் விசாரித்தபோது தொலைபேசியில் அழைப்பு எடுத்து அவளை கேளுங்கள் என மாமியார் கூறியதனால் கடுப்பான வைத்தியர் மாமியாரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதனை எதிர்பாராத மாமியார் கடுமையாக கூக்குரல் இடத்து கத்த அயலில் உள்ளவர்கள் தாயாரை பாதுகாத்து வெளியேற்றிய நிலையில் தாயார் தாக்கப்பட்டதை அறிந்து வீட்டுக்கு வந்த மனைவியையும் வைத்தியர் தாக்கியதாகத் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிசாரிடம் மனைவி மற்றும் தாயார் முறைப்பாடு வழங்கியதை அடுத்து வைத்தியர் பொலிச் நிலையம் சென்ற போது அங்கு மனைவி மற்றும் தாயாருடன் குறித்த சட்டத்தரணியும் நின்றுள்ளார்.
இதனால் கடும் கோபமுற்ற வைத்தியர் பொலிஸ்நிலையத்திலேயே சட்டத்தரணியை தாக்க முற்பட்டவேளை பொலிசார் தலையிட்டு தடுத்தாகவும் தெரியவருகின்றது.
தற்போது வைத்தியருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு வைத்தியர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை தனக்கு லண்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொலை அச்சுறுத்தல் வருவதாகவும் ரவுடிகளைக் கொண்டு தன்னை கொலை செய்யப் போவதாக அவர்கள் அச்சுறுத்துவதாகவும் தொலைபேசி குரல்பதிவு ஆதாரங்களுடன் வைத்தியரும் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கூறப்ப்படுகின்றது. ஈடுபட்ட 18 பெண்கள் கைது
உயர்கல்வி கற்பதற்கு தேவையான பயணத்தை பெறுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 18 பெண்கள் தலங்காமவில் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.
பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் உதயகுமாரவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்க தெரிவித்துள்ளார்.
4 இடங்களில் சோதனை செய்து கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணைகளில், தற்போதுள்ள பொருளாதார நிலைமைகள் காரணமாக உயர்கல்வி கற்க முடியாததால் பணம் சம்பாதிப்பதற்கு இந்த வேலையை செய்வதாக கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட யுவதிகளாவர்.