யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரி நேர்முக தேர்வுகள் 25ம் திகதி தொடக்கம்
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரி நேர்முக தேர்வுகள் இம்மாதம் 25ம் திகதி தொடக்கம் 29ம் திகதிவரை இடம்பெறும். என கல்வியியற் கல்லுாரி பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை முழுவதும் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளுக்கான புதுமுக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு இம் மாதம் தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்
குறித்த நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் மாசி மாதம் 3ம் திகதி வரை இடம்பெறும் என உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் யாழ்.கோப்பாய் தேசியற் கல்வியற் கல்லூரிக்கான நேர்முகத் தேர்வு மேற் குறித்த திகதிளில் இடம்பெறும்.
எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.