சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 200க்கும் அதிகமானோர் பலி
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8ஆகப் பதிவானது. காசியான் டெப் மாகாணம் நுர்நாகி நகரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் நிலநடுக்கமானது மையம்கொண்டிருந்தது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இதுவரை 200 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் காயமடைந்தனர். தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.