சந்தேகத்திற்கிடமான முறையில் தீக்காயங்களுடன் ஒருவர் உயிரிழப்பு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் தீக்காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (07) அதிகாலை 2 மணியளவில் களுத்துறை கட்டுகுருந்த குரே மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (08) அவர் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளதாக இதுவரையிலான விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.