ஆசிரியர் பற்றாக்குறை – 26 ஆயிரம் பேருக்கு நியமனம்

பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அவர்களில் இருபத்தாறாயிரம் பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில் அரசாங்க சேவையில் இணைந்து கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பட்டதாரிகளுக்கு இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.
40 வயதுக்குட்பட்ட அரச பணியில் பணிபுரியும் எந்தப் பட்டதாரியும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்லைன் முறை மூலம் விண்ணப்பங்களை அனுப்ப இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Related Post

இலங்கையில் பலரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை
பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் 80 பாதாள உலக குற்றவாளிகளின் சொத்துக்களை [...]

உயர்கல்வியை கற்பதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் கைது
உயர்கல்வி கற்பதற்கு தேவையான பயணத்தை பெறுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 18 பெண்கள் [...]

யாழ் நகரில் புடவை விற்பனை நிலையங்களை மூட நடவடிக்கை
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புடவை விற்பனை நிலையங்களில் போதை மாத்திரை விற்பனை [...]