தேர்தல் ஆணைக்குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல்
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினுடைய உறுப்பினர் எம்.எம்.மொகமட்டுக்கு சமூக வலைத்தளமான வட்ஸ்அப் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்திற்கு (கபே) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீம் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் ஆணைக்குழுவினுடைய உறுப்பினருக்கு வட்ஸ்அப் ஊடாக தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகாவிடில் கழுத்தறுத்து கொலை செய்யப் போவதாக அச்சுறுத்துவதாக இன்றைய தினம் கபே அமைப்புக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.