யாழ் அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் கடமைகளைப் பொறுப்பேற்றார்


யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று (18) கடமைகளைப் பொறுப்பேற்றார் .


இதன்போது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பதற்காக வருகைதந்த அரசாங்க அதிபரை மேலதிக அரசாங்க அதிபர் ம பிரதிபன் மற்றும் மாவட்ட செயலக அதகாரிகள் பிரதேச செயலாளர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு வருகை பதிவேட்டில் கையேழுத்தினை ஈட்டு அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கடமைகளை பொற்றுக்கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் புதிய அரசாங்க அதிபருடன் அவருடைய குடும்பத்தினர் விவசாய அமைச்சின் உத்தியோகத்தினர் வடமாகாண பிரதம செயலாளர் போன்றோர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *