மனைவி கொலை – மாடியில் இருந்து குதித்த கணவன் படுகாயம்

பொரளை, சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (13) இரவு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த நபர் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான நீதவான் மரண விசாரணை இன்று (14) நடைபெறவுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

பாகிஸ்தானில் வௌ்ளப்பெருக்கில் சிக்கி 903 பேர் பலி
பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் [...]

டிசம்பர் முதல் தனிநபர்களுக்கான புதிய வருமான வரி
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி [...]

பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம்
குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும் [...]