இரு பேருந்துகள் மோதி விபத்து – 14 பேர் பலி
ஐவரிகோஸ்ட் தலைநகர் யமுசுக்ரோ அருகே இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இறந்தவர்களில் ஒன்பது ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குவர் மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஒன்றில் இறுதிச் சடங்கிற்குச் சென்ற வெளிநாட்டவர்கள் குழு ஒன்று பயணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான சரியான காரணம் உறுதி செய்யப்படவில்லை.