பூட்டிய வீட்டிலிருந்து 5 குழந்தைகள் உட்பட 8 பேரின் சடலங்கள் மீட்பு
அமெரிக்காவில் விவாகரத்து கோரி மனைவி கோர்ட்டுக்கு சென்றதால் ஆத்திரமடைந்த கணவர் 5 குழந்தைகள் உட்பட 7 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஏனோக் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 4 வயது சிறுமி உள்பட 8 பேரின் உடல்களை போலீசார் மீட்டனர். எனோக் காவல்துறை தலைவர் ஜாக்சன் அமெஸ் கூறுகையில், ‘உட்டாவைச் சேர்ந்த மைக்கேல் ஹைட், தனது ஐந்து குழந்தைகளையும், மாமியார் மற்றும் அவரது மனைவி தௌஷா ஹைட்ஸ் ஆகியோரையும் சுட்டுக் கொன்றார்.
முதற்கட்ட விசாரணையின்படி, அவரது மனைவி தௌஷா ஹைட்ஸ் தனது கணவரிடமிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு விவாகரத்து மனு தாக்கல் செய்தார். எனவே மைக்கேல் ஹைட் நீதிமன்ற சம்மன் பெற்றார். மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் இருந்த 5 குழந்தைகள், மாமியார், மனைவி உட்பட 7 பேரை சுட்டுக் கொன்றார். அதன் பிறகு அவரும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டை மற்றும் விவாகரத்துக்கான காரணங்கள் தெரியவில்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து மனுவில், மனைவி ஏன் கணவரிடம் விவாகரத்து கோரினார் என்பது தெரியவந்தால் தான் கொலைகளுக்கான காரணம் தெரியவரும்,” என்றார்.