விஜய் உடன் திருமண வாழ்வில் இணைந்த கீர்த்தி சுரேஷ் – அதிர்ச்சியில் ரசிகர்கள்
மனைவி சங்கீதாவை நடிகர் விஜய் விவாகரத்து செய்துவிட்டதாக விக்கி பீடியாவில் எடிட் செய்யப்பட்ட தகவல் இளையதளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விக்கி பீடியாவில் எடிட் செய்யப்பட்டது.
ரசிகர்கள் அதிர்ச்சி
, இதனால் தான் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பிரியா அட்லீயின் சீமந்தம் நிகழ்ச்சியில் மனைவி இல்லாமல் தனியாக கலந்து கொண்டார்.
இந்தநிலையில், சங்கீதா வெக்கேஷனுக்காக மகன் மற்றும் மகளுடன் லண்டன் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜய் சென்னையில் உள்ள பணிகளை முடித்துக் கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க லண்டன் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே விஜய் ரசிகர்கள் அனைவரையும் விக்கி பீடியாவின் தகவல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அதுமட்டுமல்லாது விக்கிபீடியா பக்கத்தில், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் மியூச்சுவல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக பதிவிடப்பட்டுள்ளது.
யாரோ சில விசமிகள் கீர்த்தி சுரேஷ் தான் விஜய்யின் பார்ட்னர் என்றும், விஜய்க்கு மூன்று குழந்தைகள் இருப்பது போன்றும்… அத்துமீறி விக்கிபீடியா பேஜில் மாற்றம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது விக்கிபீடியோவில் நடிகர் விஜய்யின் பக்கம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை நடிகர் விஜய் இன் மனைவி சங்கீதா இலங்கை பின்னனியை கொண்ட தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.