யாழில் நாய்கள் உண்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் நாய்கள் உண்ட நிலையில் வீதியோரமாக மீட்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை (02) மாலை மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் 34 வயதான பெண் ஒருவருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது, பிறந்த 4 நாட்களான பெண் குழந்தை ஒன்றின் சடலத்தை நாய்கள் உண்டபோது கண்ட ஊரவர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இது தொடர்பாக விசாரணைகளை முடுக்கிவிட்ட பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.