சுன்னாகத்தில் இரு வீதிகள் திறப்பு

புத்தாண்டு நாளில் சுன்னாகத்தில் புனரமைக்கப்பட்ட இரு வீதிகள் திறப்பு
யாழ்.சுன்னாகம் மேற்குப் பகுதியில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் எட்டாம் வட்டாரத்திற்கு உரிய நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட இரு வீதிகள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் 160 மீற்றர் நீளமான சுன்னாகம் மேற்கு ஜே-199 கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட டாக்டர் சுப்பிரமணியம் குறுக்கு வீதி 14 லட்சம் ரூபா நிதியிலும், இதே பகுதியைச் சேர்ந்த 70 மீற்றர் நீளமான தம்பிமுத்து உபாத்தியார் 4 ஆம் குறுக்கு வீதி ஆகிய வீதிகளேதிறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேற்படி இரு வீதிகளும் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படவில்லை. இதனால், மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இரு வீதிகளையும் பயன்படுத்தும் குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய வலிகாமம் தெற்குப் பிரதேச சபை உறுப்பினரும், சமாதான நீதவானுமான சமூக திலகம் பாலசிங்கம் சுரேஷ்குமாரின் முன்மொழிவுக்கு அமைய இரு வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. சமூக திலகம் பாலசிங்கம் சுரேஷ்குமார் பொதுமக்களுடன் இணைந்து இரு வீதிகளையும் திறந்து வைத்தார்.