யாழில் போதைபொருளுக்காக விபச்சாரத்தில் ஈடுபடும் இளம் பெண்கள் – அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள்களான ஹெரோய்ன் மற்றும் ஐஸ் என்பனவற்றைக் கொள்வனவு செய்வதற்காகப் பாலியல் துர்நடத்தையில் 23 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை இளம் சமூகத்தினர் மத்தியில் அதிகரித்துள்ளதுடன் இதனால் உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் போதைப்பொருள் விநியோகிக்கும் சில தரப்புக்கள் இளம் பெண்களை இலக்கு வைத்தும் அதனை விநியோகித்து வந்துள்ளன.
போதைப்பொருளுக்கு அடிமையான இளம் பெண்கள்
அவ்வாறு உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான இளம் பெண்கள், அவற்றைத் தொடர்ந்து கொள்வனவு செய்வதற்காகப் பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி யாழ். மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) ஏழு பெண்கள் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்விக்கும் கலாச்சாரத்திற்கும் பேர்பெற்ற யாழ்ப்பாணத்தில் தற்போது உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதுடன் அது வளரும் இளம் சமுதாயத்தையும் பாழாக்கும் செயலாக அமைத்துள்ளது.
எனவே இந்த போதைப்பொருளை ஒழிக்கவேண்டும் என்பதுடன், இவ்வாறான கலாசாரப் பிறழ்வுகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியவேண்டுமெனவும் சமூகஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.