இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய தனி நபர் வருமான வரி
நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய வரி கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாவிற்கு அதிகமாக மாதாந்த வருமானம் பெறுவோருக்கு 06 வீதம் தொடக்கம் 36 வீதம் வரை 06 கட்டங்களாக வருமான வரி அறவிடப்படவுள்ளது.
புதிய வரி
அதற்கமைய ஒரு மாத சம்பளம் ஒரு இலட்சம் பெறுபவர் 3,000 ரூபாவும், 2 இலட்சம் சம்பளம் பெறுபவர் 10,000 ரூபாவும்,
2,50000 ரூபா சம்பளம் பெறுபவர் 21,000 ரூபாவும், 3 இலட்சம் சம்பளம் பெறுபவர் 35,000 ரூபாவும்,3,50000 ஆயிரம் சம்பளம் பெறுபவர் 52,500 ரூபாவும்,
4 இலட்சம் சம்பளம் பெறுபவர் 70,500 ரூபாவும்,5 இலட்சம் சம்பளம் பெறுபவர் 10,6000 ரூபாவும்,7,50000 ரூபா சம்பளம் பெறுபவர் 19,6500 ரூபாவும்,
10 இலட்சம் சம்பளம் பெறுபவர் 28,6500 ரூபாவும் மாத வரி செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.