உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திய -19 வயது பெண் கைது
கேரள மாநிலம் மலப்புரம் அருகே கரிப்பூர் சர்வதேச விமானநிலையம் செயல்படுகிறது. இங்கு நேற்று ஒரு இளம்பெண் தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார்.
காசர்கோடு பகுதியை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் ஷாலா என்றும், 19 வயதான அவர் துபாயில் இருந்து இந்த தங்கத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் விமானத்தில் வந்து இறங்கிய அந்த இளம் பெண்ணை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சோதனை கருவி, அவரிடம் தங்கம் இருப்பதற்கான எச்சரிக்கை ஒலியை எழுப்பியது. ஆனால் அவர் தங்கம் தன்னிடம் இல்லை என்று மறுத்தார்.
இதனால் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது தங்கத்தை பசைவடிவில் மாற்றி 3 பாக்கெட்டுகளில் அடைத்து, அதை உள்ளாடைக்குள் வைத்து தைத்து மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர். பிடிபட்ட தங்கம் 1.9 கிலோ என்றும் இதன் மதிப்பு ரூ.1 கோடிக்கு அதிகம் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.