மட்டக்களப்பில் 7 வயதுச் சிறுமி நீரில் மூழ்கி மரணம்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாமரைக்கேணியில் நேற்று மாலை சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர்கள் பலருடன் தாமரைக்கேணியில் நீராடிக் கொண்டிருக்கும் போதே சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்த சிறுமி ஏறாவூர் தக்வா பள்ளி வீதியைச் சேர்ந்த மர்சூக் பாத்திமா றினா என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் உடலை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சென்று பார்வையிட்டு, சடலத்தை பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்0
Related Post

முல்லைத்தீவில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் [...]

அம்பாறையில் பாரிய சொறிமுட்டையில் (ஜெலி) அகப்பட்டு மீனவர் உயிரிழப்பு
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(8) காலை 7 [...]

யாழில் காதலர் தினத்தன்று மாயமான 18 வயது இளைஞன் மற்றும் 35 வயது குடும்ப பெண்
யாழ்.கோண்டாவில் பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞனையும், சுன்னாகம் பகுதியை சேர்ந்த 35 [...]