21 வயதான யுவதி தூக்கிட்டு தற்கொலை
21 வயதான யுவதி ஒருவர் தனது காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
வெயாங்கொடை தன்விலான பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தான் தற்கொலை செய்து கொள்வதாக தனது காதலனுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவித்திருந்த நிலையில் அங்கு காதலன் வருவதனைக் கண்ட யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து 23 வயதான காதலன் பொலிஸில் சரணடைந்ததுடன் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.