மும்மடங்காக உயர்ந்த மின் கட்டணம் – பேராபத்தில் மக்கள்


புதிய மின்சார விலைச்சூத்திரத்தின் படி, முதல் 30 அலகுகளுக்கான கட்டணம் அலகு ஒன்றுக்கு 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, முதல் 30 அலகுகளுக்கு, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நிலையான கட்டணமாக 1,500 ரூபாயும், மற்றும் கட்டணமாக 3,000 ரூபாய் அறவிடப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித, ஞாயிற்றுக்கிழமை (18) தெரிவித்தார்.

“மின் கட்டண திருத்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதல் அலகு 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கவுள்ளது.

1,500 ரூபாய் நிலையான கட்டணங்களாகும். அதாவது 30 அலகுகளைப் பயன்படுத்துபவர் 3,000 ரூபாய் செலுத்த வேண்டும். மின் கட்டணம் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இது கறுப்புச் சந்தையைத் தாண்டிய விலை உயர்வு. மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நோக்கத்தில் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *