ஜனவரி 1 முதல் கிராம உத்தியோகத்தர்கள் இடமாற்றம்
கிராம உத்தியோகத்தர் பிரிவு ஒன்றில் 05 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி மாவட்ட மற்றும் அமைச்சுக்களின் மேல்முறையீட்டு வாரியங்களில் இடமாற்றம் செய்யப்படாததற்கு சிறப்புக் காரணங்களைக் கொண்ட அலுவலர்களைத் தவிர, 5 வருட சேவையை பூர்த்தி செய்த ஏனைய அனைத்து கிராம உத்தியோகத்தர்களையும் இடமாற்றம் செய்வது கட்டாயம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், அடுத்த வருடம் 31 ஆம் திகதியுடன் 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் வருடாந்த இடமாற்ற உத்தரவு வழங்கப்படாத உத்தியோகத்தர்கள் இன்னும் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இருந்தால் அவர்களுக்கு இடமாற்ற உத்தரவு வழங்குமாறும் அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.