கொழும்பு வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பாரிய கொள்ளை
கொழும்பு, பம்பலப்பிட்டி ஸ்கெல்டன் வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பாரிய கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரகசியமாக வீட்டிற்கு நுழைந்தவர்கள், கைத்துப்பாக்கி, மூன்று கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்து அரசாங்க அனுமதி பெற்ற கைத்துப்பாக்கி , 12 தோட்டாக்கள், ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் பணம், 6,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 10 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கப் நகைகள் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்