உள்நாட்டு உற்பத்தி 11.8% ஆக வீழ்ச்சி
இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில், (ஜூலை – செப்டெம்பர்) இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 11.8% ஆக சுருங்கியுள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்), மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4% ஆக சுருங்கியது.
மூன்றாம் காலாண்டில் விவசாயம் 8.7% மற்றும் தொழில்துறை 21.2% சுருங்கியது. அதே சமயம் சேவைகள் 2.6% குறைந்துள்ளது என்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.4% ஆக சுருங்கியது. அதன்பிறகு, ஒரு காலாண்டில் இலங்கை அனுபவித்த இரண்டாவது மோசமான பொருளாதார சுருக்கம் இதுவாகும் என்று பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக பணவீக்கம், மின்வெட்டு, அதிக வட்டி விகிதங்கள், இறக்குமதி பற்றாக்குறை மற்றும் எரிபொருள் மற்றும் உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கடந்த காலாண்டில் வளர்ச்சியை பாதித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மக்களின் உண்மையான வருமானம் குறைவதால் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகளின் தேவை குறைவது பொருளாதாரத்தை இந்த சரிவை நோக்கி செலுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.