உபவேந்தர் தாக்குதல் தொடபில் 4 பேர் கைது
பேராதனை பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது மகனைத் தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன், அதன் பிரகாரம் நேற்றிரவு (12) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் நிட்டம்புவ, சந்தலங்கல, கிரித்தலே, மாத்தளை, ஹெனகமுவ மற்றும் கலகம்வத்தை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 23 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இன்று காலை மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரையில் குறித்த சம்பவம் தொடர்பில் 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.