தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கொலை – சந்தேக நபர் தற்கொலை
தூங்கிக் கொண்டிருந்த மூன்றரை வயதுக் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குழந்தை கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக மீகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் தாய், மூத்த குழந்தையை பாடசாலைக்கு விடுவதற்குச் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.