நடித்தால் அந்த வேடம்தான் – லாரா திடீர் முடிவு

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்று பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் லாரா தத்தா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
2000-ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் லாரா தத்தா பட்டம் வென்றார். அதன் பிறகு திரை உலகிற்கு வந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இவர் தமிழில் அரசாட்சி என்னும் படத்தில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தார்.
திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்தார். அதன்பின் மீண்டும் பெல்பாட்டம் என்ற படத்தின் மூலம் அக்ஷய் குமாருடன் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதில், அவர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்திருந்தார்.
மீண்டும் நடிப்பது குறித்து சமீபத்தில் அவர் கூறியிருப்பதாவது, கதாநாயகர்களுக்குக் காதலியாகவும், மனைவியாகவும் நடித்துச் சோர்ந்து விட்டேன். அதனால் படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டேன். நகைச்சுவை வேடத்தில் நடிப்பது என்றால் எனக்குப் பிடிக்கும். அதனால் இனிமேல் நடித்தால் நகைச்சுவை வேடத்தில்தான் நடிப்பேன் என்று கூறினார்.
Related Post

யாஷிகாவிற்கு திருமணம் – ரசிகர்கள் குழப்பத்தில்
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் அவருடைய [...]

அயலான் ஏலியனுக்கு குரல் கொடுத்து இவரா ?
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அயலான். இப்படம் பல [...]

நடிகர் விமல் மீது புகார் அளித்த தயாரிப்பாளர் கைது
தன் மீது பொய் புகார் கொடுத்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், [...]