ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகள்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.
திட்டத்தின் மூலம், ஒரு விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை தனது வீட்டில் இருந்தபடியே திணைக்களத்துக்குச் சமர்ப்பிக்க முடியும்.
கைரேகை போன்ற விடயங்களுக்காக மாத்திரம் விண்ணப்பதாரர் திணைக்களத்துக்கு வரவேண்டியிருக்கும்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கைரேகைகளைப் பெறுவதற்காக 50 முகப்பு அலுவலக மையங்களை நிறுவ திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 50 பிரதேச செயலக அலுவலகங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.