“மோசே இல்லம்” என்ற பெயரில் சட்டவிரோத காப்பகம் – யுவதி ஒருவர் கர்ப்பம்


இல்லத்தின் இயக்குபவர் புரட்சி எனப்படும் யோகநாதன் யோகராசா. முன்னாள் புலி உறுப்பினர். மதமாற்றம் செய்வதை முழுநேர தொழிலாக கொண்டவர்.

இந்த புரட்சியின் தந்தை பல வருடங்கள் முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை வன்புணர்வு செய்து அந்த பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த பிள்ளை சில வருடங்களுக்கு முன் விசுவமடு குளத்தில் மூழ்கி மர்மமான முறையில் இறந்திருந்தது.

இந்த புரட்சி எனப்படும் யோகநாதன் யோகராசா என்பவரும் பல பெண்களுடன் தவறான உறவில் இருப்பவர். அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்ய முற்பட்டு பின்னர் காப்பாற்றப்பட்டிருந்தார்.

இந்த புரட்சி எனப்படும் யோகநாதன் யோகராசா தற்போது திருமணம் முடித்திருக்கும் பெண்மணியும் தவறான உறவில் கர்ப்பம் ஆகி, அது பிரச்சினை ஆனதால் மணமுடித்தவர்தான்.

புரட்சி எனப்படும் யோகநாதன் யோகராசாவின் மனைவி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் தற்போது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தராக வேலை செய்து வருகிறார்.

இன்று புதுக்குடியிருப்பு உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்று விசாரணை நடத்தினர்.

ஆனால் கர்ப்பமான பெண்பிள்ளை அங்கு இல்லை. அவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு அல்லது காணாமல் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பெண்கள் சிறுவர் காப்பகம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த யுவதி ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ள சம்பவம் அந்த பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பம் அடைந்துள்ள குறித்த யுவதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், குறித்த யுவதி சில மாதங்களுக்கு முன் கட்டாயப்படுத்தி அந்த இல்லத்தில் சட்டவிரோதமாக தங்க வைக்கப்பட்டிருந்தார் என்பதும் அயலில் உள்ள பொதுமக்களுடனான உரையாடலில் தெரியவருகிறது.

மேற்படி காப்பகம் தொடர்பில் நடவடிக்கை எடுத்து அதனை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பு முயற்சி செய்த போதும் முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலையீடு செய்து அதனைத் தடுத்து, தொடர்ந்தும் அந்த காப்பகம் இயங்க வகைசெய்ததாக மக்களும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் சிலரும் குறிப்பிடுகின்றனர்.

முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் கணவரே மதமாற்ற சபைகளின் ஒன்றியத்திற்கு தலைவராக இருந்ததும், அவ்வாறான மதமாற்ற சபை ஒன்றினாலேயே குறிப்பிட்ட காப்பகம் நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *