யாழில் போதையில் சென்று மோதிய காவல்துறை – தப்பிச் செல்ல முயற்சி
யாழ்.நகரில் நிறைபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற காவல்துறை உத்தியோகஸ்த்தர்கள் இருவர் வாகனம் ஒன்றை மோதிவிட்டு தப்பிச் செல்வதற்கு முயற்சித்த நிலையில் பிரதேச மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ். முலவை சந்திப் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
வாகனம் ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் பொலிஸ் என கூறி தப்பிச்செல்ல முயன்ற வேளை அங்கிருந்த மக்களால் காவல்துறை மடக்கிப் பிடிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் மற்றவர் ஐயன் குளம் காவல்துறை நிலையத்திலும் கடமை ஆற்றுபவர்கள் என கூறப்படுகின்றது.