யாழ் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலை

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று வீதியில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதியிலேயே முதலை வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் இருப்பதாக வெள்ளிக்கிழமை(25) காலை அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டைமானாறு ஏரியில் முதலை இருப்பதாக ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related Post

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான அறிவிப்பு தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு [...]

“ஹிஸ்டெரியா ” அறிகுறியுடன் 15 வயது சிறுவன் அடையாளம்
ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சிறுவன் ஒருவர் மஹியங்கனை ஆரம்ப [...]

மின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு கோரிக்கை
புத்தாண்டு காலத்தில் வீட்டு மின்சார பாவனை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் தமது அன்றாட [...]