சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் ஒன்று இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்று நோயுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒருவருக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதால், முறையான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் என வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.