முல்லைத்தீவு கடலில் இழுத்துச் செல்லப்பட்ட 26 வயது இளைஞன்
முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் ஏரல் எடுக்க சென்ற இளைஞன் ஒருவர் நீர் ஏரியில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் 20.11.22 இன்று காலை இடம்பெற்றுள்ளது.
05 ஆம் வட்டாரம் இரணைப்பாலை புதுக்குடியிருப்பினை சேர்ந்த 26 அகவையுடைய செ.நிசாந்தன் என்ற இளைஞனே கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
உடலத்தினை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசில் முறை;பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இரணைப்பாலை பகுதியினை சேர்ந்த இளைஞன் குடும்ப வறுமை காரணமாக உணவுக்காக ஏரல் எடுக்க சென்றுள்ளார்.
சாலை கடல் நீர் ஏரிக்கு அருகில் இராணுவ காவலரண் ஒன்ற காணப்படும் நிலையில் ஏரியின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்க கடக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது ஏரியின் நீர் ஒட்டத்தில் கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
தயார் மற்றும் பெரியம்மா ஆகியோரும் ஏரல் எடுக்க சென்ற நிலையில் அவர்களின் கண்முன்னே இளைஞன் கடலில் இழுத்து செல்லப்டப்டுள்ளார்.மூத்த நடிகரும் வானொலி அறிவிப்பாளருமான அல்பிரட் பெரேரா
மூத்த நடிகரும் வானொலி அறிவிப்பாளருமான அல்பிரட் பெரேரா இன்று பிற்பகல் காலமானார். இது டலுகமவில் உள்ள அவரது வீட்டில்.
அல்பிரட் பெரேரா மிகவும் பிரபலமான வானொலி நிகழ்ச்சியான வின்ஹோ சமயவின் நிறுவனர் மற்றும் ஸ்தாபக அறிவிப்பாளர் ஆவார்.
வானொலி செய்தி தொகுப்பாளராகவும், இலங்கை நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.
இறுதிக் கிரியைகள் நாளை பிற்பகல் டலுகம தேவாலய மயானத்தில் நடைபெறவுள்ளது