மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி – கண்ணீர்ப்புகை தாக்குதல்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மற்றுமொரு மாணவர் குழு உட்பட பாரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பொரளை மயானச் சுற்றுவட்டத்திலிருந்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தை நோக்கி வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொழும்பு, ப்ளவர் வீதி பகுதியில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்வாறு அவர்கள் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தாமரை தடாகம் , ஹோர்டன் பிளேஸ் பிரதேசத்திற்கு அருகில் அவர்கள் மீதும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.