யுனானி வைத்திய முறை


உடலுக்கு வரும் நோய்களை நிலம், காற்று, நீர், நெருப்பு என்ற நான்கு அடிப்படை அம்சங்களின் சமநிலையின்மையாகவும் பார்க்கிறது. இதுதான் யுனானியின் அடிப்படை.

இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக யுனானி மருத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

முகலாயர் ஆட்சி காலத்தில்தான் யுனானி சாதாரண மக்களிடையே பிரபலம் ஆனது. ஆங்கிலேயர் காலத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்துப் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் இருந்த தடைகள் யுனானிக்கும் இருந்தன. நாடு விடுதலை பெற்ற பிறகு மகாத்மா காந்தியின் தலையீட்டை அடுத்து மத்திய அமைச்சரவையில் இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிக்க ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகளுக்கு ஆதரவு கிடைத்தது.

மனித உடலில் இருக்கும் திரவங்களான கோழை, குருதி, மஞ்சள் பித்தம், கரும் பித்தம் ஆகியவற்றுக்கிடையே உள்ள சமநிலையின்மையை நோய்க்கான காரணமாக யுனானி வைத்திய முறை பார்க்கிறது. மனிதனுக்கு நோய் ஏற்படுவதற்கான சூழ்நிலைகளையும் நான்காக பார்க்கிறது: அவை வெப்பம், குளிர், ஈரம், உலர்வுத்தன்மை.

உடலுக்கு வரும் நோய்களை நிலம், காற்று, நீர், நெருப்பு என்ற நான்கு அடிப்படை அம்சங்களின் சமநிலையின்மையாகவும் பார்க்கிறது. இதுதான் யுனானியின் அடிப்படை.

மனிதனின் சூழ்நிலைகளையும் நான்காகப் பார்ப்பது யுனானியின் தனித்துவ அம்சம்.

மேலும் வளரிளம் பருவம், வளர்ந்த பருவம், நடு வயது, முதுமை என்று வாழ்க்கை நிலைகளையும் நான்காகப் பார்க்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு உடல் நிதானம் இருக்கும். மேலும் யுனானி மருத்துவமுறை, நோயை மட்டும் பார்ப்பதில்லை. முழுமையாக மனித உடலையும் மனதையும் பார்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *