பாடசாலை மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

பாடசாலை மாணவி ஒருவரை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 28 வயதான குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நுவரெலியா பகுதியில் இடம்பெற்றுள்ளது. 28 வயதான சந்தேகநபர் ஏற்கனவே 2 திருமணங்கள் முடித்துள்ள நிலையில்,

15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாடசாலை சீருடையுடன் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தங்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபரை கைது செய்த பொலிஸார் அவருக்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் ஹோட்டல் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.