திருகோணமலையில் நோயாளர்களுடன் சென்ற அம்புலன்ஸ் மீது தாக்குதல் – போதை ஆசாமி கைது
நிறைபோதையில் அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் நடத்திய இளைஞர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் திருகோணமலை – மஹதிவுல்வெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. மஹதிவுல்வெல பிரதேச வைத்தியசாலையல் இருந்து நோயாளர்களுடன்,
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது வீதி ஓரமாக மதுபோதையில் நின்றிருந்த 36 வயதான கன்னியா பகுதியை சேர்ந்த உதய சந்திரன் சுரேஷ் என்ற இளைஞன் அம்புலன்ஸ் மது பொல்லால் தாக்கினார்.
தாக்குதலில் அம்புலன்ஸ் வண்டியின் கண்ணாடி சேதமடைந்துள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகள் தொடர்வதாகவும்,
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.