பெண் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கி, சூடு வைத்த இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரி

பெண் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதுடன் தீயினால் சூடு வைத்து சித்திரவதை செய்த இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு பிணை வழங்க மறுத்த கம்பஹா நீதிவான் மஞ்சுள கருணாரத்ன, சந்தேக நபரை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (நவ. 09) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர், குறித்த பெண்ணை தீயினால் சூடு வைத்து, எரித்து சித்திரவதை செய்யும்போது உயிரைக் காப்பாற்ற மேல் மாடியிலிருந்து கீழே குதித்ததாக காயமடைந்த பெண் கம்பஹா பொலிஸில் வாக்குமூலம் வழங்கியதாக
பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சஞ்சய் குணசேகரவும் அவரது உடல் எரிக்கப்பட்ட விதம் குறித்த புகைப்படங்களை முன்வைத்தார்.
Related Post

நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த சர்வதேசம் தவறி உள்ளது
வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், [...]

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
ஒரு லீட்டர் டீசலின் விலையை 15 ரூபாவால் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் [...]

இலங்கையில் மீண்டும் கொவிட் அபாயம்
நாட்டில் பதிவாகியுள்ள கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், நாளாந்தம் குறைந்த எண்ணிக்கையிலான [...]