எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
ஒரு லீட்டர் டீசலின் விலையை 15 ரூபாவால் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு லீட்டர் டீசலின் புதிய விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 365 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது.
எனினும் பெற்றோலின் விலையை அதிகரிக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.