7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையினால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.
இதற்கமைய நேற்று பிற்பகல் 03 மணி முதல் இன்று பிற்பகல் 03 வரையிலான 24 மணித்தியாலத்திற்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பதுளை, கண்டி, கேகாலை மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.