பள்ளி மாணவனுக்கு மதுகொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த ஆசிரியை


திருவனந்தபுரம் ; கேரளாவில் பள்ளி மாணவனுக்கு மதுகொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த டியூசன் டீச்சர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவனின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. சரிவர படிக்காமலும், மனரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருந்து வந்துள்ளான். இதனால், கவலையடைந்த பெற்றோர், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் அளித்த புகாரின் பேரில், அவனுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அப்போது, ஆலோசகரிடம் மாணவன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளான். அதாவது, தான் டியூசன் படித்த ஆசிரியை தனக்கு மது கொடுத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளான். இதனை கேட்டு, பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசார் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட ஆசிரியையை கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது :- கொரோனா சமயத்தில் திரிச்சூரை சேர்ந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவன் அதேபகுதியை சேர்ந்த 34 வயதான பெண்ணின் வீட்டிற்கு டியூசனுக்கு சென்று வந்துள்ளார். ஜிம் பயிற்சியாளராக இருந்த அந்தப் பெண், கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்த வேலையை விட்டு விட்டு டியூசன் எடுக்கத் தொடங்கியுள்ளார்.

கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த அந்தப் பெண், தனது வீட்டிற்கு டியூசன் படிக்க வந்த அந்த 16 வயதான பள்ளி மாணவனுக்கு டீச்சர் மது கொடுத்துள்ளார். மது குடித்ததில் மயக்க நிலைக்கு சென்ற அந்த மாணவனை டியூசன் டீச்சர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். டியூசனுக்கு சென்ற அந்த மாணவனுக்கு மதுகொடுத்து டீச்சர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவன் மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான், எனக் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *