யாழில் கணவன் மனைவி சண்டை – தாயும் 7 மாதக் குழந்தையும் சடலமாக மீட்பு

யாழில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாயும் 7 மாதக் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மிருசுவில் தெற்கு மிருசுவில் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றின் கணவன் மனைவிக்கிடையில் நேற்று இரவு ஏற்பட்ட முரண்பாடு வாய்த்தர்க்கமாக முற்றியிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நித்திரையில் இருந்து விளித்த கணவன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என பல இடங்களிலும் தேடியுள்ளார்.
இதன் பின்னர் கிணற்றிலிருந்து அவரது ஏழு மாத பெண்குழந்தை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
ஆயினும நீண்ட நேரமாகவும் மனைவியை காணவில்லை என கணவன் தேடுதல் நடத்தியுள்ளார்.
இதனை அடுத்து குழந்தை மீட்கப்பட்ட குறித்த கிணற்றிற்குள் இறங்கி தேடிப் பார்த்த போது கிணற்றுக்குள் புதையுன்ற நிலையில் இருந்து மனைவியும் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

இவ்வாண்டில் ஒன்றுமே ஆரம்பிக்க வேண்டாம்
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் முடியும் வரை புதிய [...]

யாழில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் நாட்டின் [...]

கடுமையான எரிசக்தி நெருக்கடி – 18 மணி நேரம் மின் தடை
பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி, நாட்டில் நீடித்த மின் தடையை மோசமாக்கியுள்ளது. இதனால், [...]