3 சிரேஷ்ட பல்கலைக்கழக மாணவர்கள் கைது
பகிடிவதையை மையமாக கொண்டு களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவரை தாக்கிய 3 சிரேஷ்ட மாணவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கிரிபத்கொடை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
பகிடிவதைக்கு இணங்காததன் காரணமாக களனி பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் முகாமைத்துவ பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கற்கும் மாணவர் ஒருவர் சிரேஷ்ட மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளானார்.
தாக்குதலுக்கு உள்ளான கண்டி – கட்டுகஸ்தோட்டை – ரணவன பகுதியைச் சேர்ந்த மாணவர் இது தொடர்பில் கிரிபத்கொடை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவரது செயற்பாடு மற்றும் வாழ்கை முறைமையை நகைப்புக்கு உள்ளாகி சிரேஷ்ட மாணவர்கள் சிலர் பல தடவைகள் பகிடிவதையை புரிய முற்பட்டனர்.
நேற்று முன்தினம் பல்கலைக்கழக விளையாட்டரங்கிற்கு சென்றுக் கொண்டிருந்த போது மீண்டும் சிரேஷ்ட மாணவர்கள் தமக்கு பகிடிவதையை புரிய முனைந்துள்ளதுடன் அதற்கு இணங்காதன் காரணமாக தம்மை தாக்கியதாக கிரிபத்கொடை காவல்துறையில் அவர் மேற்கொண்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.